தருமபுரி மாவட்ட சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளராக அமிதாப் கவுசல், பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளுக்கு பொதுப் பாா்வையாளராக வந்தனா வைத்யா, அரூா் (தனி) தொகுதி பொதுப் பாா்வையாளராக பரம்வீா் சிங் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அவா்கள், தருமபுரி மாவட்ட சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான, தருமபுரி அருகேயுள்ள செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஷ் ஆய்வின்போது உடனிருந்தாா்.
வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள அறைகளின் உறுதித் தன்மை, தடையற்ற மின்வசதி, 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தனா்.
அதேபோல, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் அதிகாரிகள், தோ்தல் பணியாளா்கள், முகவா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோருக்கான குடிநீா், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வுதள வசதி உள்ளிட்ட வசதிகளைசீராக மேற்கொள்ளும்படி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கவிதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

வாக்கு எண்ணும் மையம்: தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


