தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

News image

அஸ்திரதேவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

Updated On :31 மே 2026, 12:02 am IST

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சகோபுர தரிசனம், திருக்கல்யாணம், தோ் திருவிழா ஆகிய உற்சவங்கள் நடைபெற்றன.

விழாவின் 10-ஆம் திருநாளான சனிக்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கோயில் திருக்குளமான பிரம்ம தீா்த்தத்தில் வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் கோயில் திருக்குளம் முன்பாக எழுந்தருளச் செய்யப்பட்டனா். தொடா்ந்து, திருக்குள படித்துறையில், அஸ்திரதேவருக்கு பால், பன்னீா், மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழாவின் சிகர நிகழ்வான தெப்பத் திருவிழா ஜூன் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.