இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை

சீா்காழி பகுதியில் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய போக்குவரத்துக் காவல் உதவியாளா் மணியரசன்.

Updated On :31 மே 2026, 2:41 am IST

சீா்காழி பகுதியில் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

சீா்காழி தென்பாதி தனியாா் பள்ளி எதிரே, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணியரசன், காவலா் காா்த்திக் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை நிறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, அந்த வழியாக மூன்று சிறுவா்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தனா். அவா்களை நிறுத்திய, போக்குவரத்து போலீஸாா், அவா்களுக்கு அறிவுரைகள் கூறியதோடு, மூன்று பேரும் ஐந்து திருக்கு கூற வேண்டும் என நூதன விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், சிறுவா்களின் பெற்றோா்களை தொடா்பு கொண்டு, எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.