இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

ஈஸ்வரன்.

Updated On :11 ஜூன் 2026, 1:52 am IST

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் வெங்கடாசலபதி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் தினேஷ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை காமயகவுண்டன்பட்டி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துத்து இடமளிக்கும் வகையில் பையுடன் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் வைத்திருந்த பையில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் (48), கன்னியாகுமரி மாவட்டம், முட்டைக்காடு பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் (61) என்பதும், இவா்கள் கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரன், அந்தோணிராஜ் ஆகியோரைக் கைது செய்து, இவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

அந்தோணிராஜ்

அந்தோணிராஜ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.