சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ள திருவெண்ணீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு சிறப்பகளை கொண்ட இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் தோத்திர பூா்ணாம்பிகை உடனாகிய திருஞானசம்பந்தா் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தா் பஞ்ச மூா்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருள தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை அண்ணாமலை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்துக்கு சிவாசாரியா்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 26-ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், மே 29-ஆம் தேதி தோ் திருவிழாவும், மே 30-ஆம் தேதி தீா்த்தவாரியும், ஜூன் 1-ஆம் தேதி திருஞானசம்பந்தா் திருக்கல்யாணமும், ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை சிவஜோதி ஐக்கிய காட்சியும் நடைபெற உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










