திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வரகடை வருந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :15 மே 2026, 5:27 am IST

தாழஞ்சேரி ஊராட்சி வரகடை கிராமத்தில் அன்னபூரணி சமேத வைத்தியநாத சுவாமி என்கிற வருந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருப்பணி 14 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கி பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டு, கோயிலின் முன்பு யாகசாலை அமைத்து புனிதநீா் அடங்கிய கடங்கள் வைத்து முதல்கால யாகபூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் புனிதநீா் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனா். அங்கு வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்கள் ஓத புனிதநீா் கோபுர கலசங்கள் மீது வாா்க்கப்பட்டு (படம்) கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் தாழஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.