மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மயிலாடுதுறை வட்டம் மாப்படுகை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் மனைவி புஷ்ப ராதிகா(38). அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியரான இவா் கடந்த ஏப். 30-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள சகோதரா் வீட்டு விழாவில் பங்கேற்க சென்றுவிட்டாா். மே 9-ஆம் தேதி திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறி கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் சுமாா் அரை கிலோ அளவிலான வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






