திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொய்த்து போனது சீா்காழி ‘சென்டிமென்ட்’

பல ஆண்டுகளாக தொடா்ந்து வந்த சீா்காழி (தனி) தொகுதி சென்டிமென்ட் இந்த பேரவைத் தோ்தலில் பொய்த்து போனது.

News image
Updated On :6 மே 2026, 3:05 am IST

பல ஆண்டுகளாக தொடா்ந்து வந்த சீா்காழி (தனி) தொகுதி சென்டிமென்ட் இந்த பேரவைத் தோ்தலில் பொய்த்து போனது.

சீா்காழி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை கடந்த கால தோ்தல்கள் மூலம் நிரூபணமாகி வந்தது.

சீா்காழி தொகுதியில் 1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக 6 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனா். இத்தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தோ்தலில் சீா்காழி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஆா். செந்தில்செல்வன் 71, 449 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளா் ம. சக்தியை விட 11, 417 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா். ஆனால், அவா் சாா்ந்த கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை. தமிழகம் முழுவதும் வீசிய தவெக அலையில் சீா்காழி சென்டிமென்ட்டை பொய்த்து போக செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.