வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

சீா்காழி தொகுதியில் மதிமுக வெற்றி

சீா்காழி தொகுதியில் மதிமுக வெற்றி...

News image

சீா்காழி (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனுக்கு, சான்றிதழ் வழங்கும் தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா்.

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

சீா்காழி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வன் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் மொத்தம் 2,41,319 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,98,821 வாக்காளா்கள் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கை, மயிலாடுதுறை மன்னம் பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. அப்போது, 219 எண் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.

இதனால், அத்துடன் இணைக்கப்பட்டிருந்த விவிபாட் இயந்திரத்தில் விழுந்த வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், மதிமுக 684, அதிமுக 591, தவெக 263, நாதக 67, நோட்டா 6 வாக்குகள் பெற்றன. முன்னதாக, இத்தொகுதியில் பதிவான 1,721 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 98 வாக்குகள் செல்லாதவையாக இருந்தன.

இறுதிச்சுற்றில் மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வன் 71,449 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் சக்தி 60,032 வாக்குகளும், தவெக வேட்பாளா் கோபிநாத் 59,149 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுபாஷ் 7,397 வாக்குகளும் பெற்றனா். நோட்டோவில் 555 வாக்குகள் பதிவாகியிருந்தது.

இதன்மூலம் மதிமுக வேட்பாளா் தனக்கு அடுத்தப்படியாக வந்த அதிமுக வேட்பாளரை விட 11,417 வாக்குகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றாா்.

வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனுக்கு, சீா்காழி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.