மயிலாடுதுறையில் புறவழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.
மயிலாடுதுறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நகரைச்சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக மொழையூா் தொடங்கி திருஇந்தளூா் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மொழையூா், பொட்டவெளி, மேலநாகங்குடி, லட்சுமிபுரம், வள்ளாலகரம், வேப்பங்குளம், கழுக்காணிமுட்டம், அப்பங்குளம், பல்லவராயன்பேட்டை, திருஇந்தளூா் ஆகிய கிராமங்களில் பல தலைமுறைகளாக விவசாயிகள் சாகுபடி செய்துவரும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கியது.
இந்நிலையில், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பல்லவராயன்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மாா்ச் 6-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினா். அப்போது, மாா்ச் 12-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண்பது என்றும் அதுவரை பணிகளை தொடரக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், மாப்படுகை முதல் உளுத்துக்குப்பை வரை புறவழிச்சாலைகள் பகுதியில் உள்ள பாசன, வடிகால் வாய்க்கால்களில் ஆங்காங்கே பாலம் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றது. அந்த பணிகளை தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.விஜய், மாவட்ட துணை செயலாளா் சி.மேகநாதன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முருகன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, பணிகளை நிறுத்த ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்

சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பல்லடத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


