பூம்புகார் : திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திர பெருவிழாவை ஒட்டி இன்று தேரோட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழும் இக் கோயிலில் இந்திர பெருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 9-வது நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் சுவாமி அம்பாள் 3 தேர்களில் எழுந்தருள மகா தீப ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மூன்று தேரையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் துவங்கி வைத்தார். இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், டாக்டர். ஜெய.ராஜ மூர்த்தி, அறங்காவலர் நியமன குழு தலைவர் சாமிநாதன், அறங்காவலர் குழுத் தலைவர் எம் என் ஆர் ரவி, ஒன்றிய செயலாளர் பஞ்சு. குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதிதேவேந்திரன், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தில் பங்கேற்ற துர்கா ஸ்டாலின்
Summary
Chariot procession at Thiruvenkadu Swetharanyeswarar Temple: Durga Stalin participates
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்

திருப்புல்லாணி ஆதிபெருமாள் கோயில் தேரோட்டம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் தேரோட்டம்! துா்கா ஸ்டாலின் பங்கேற்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

