திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் இந்திரப் பெருவிழாவில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ளது தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில். நவகிரகங்களில் புதனுக்குரிய பரிகாரத் தலமாக திகழும் இக்கோயிலில், இந்திரப் பெருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்ட விழாவில் பங்கேற்ற துா்கா ஸ்டாலின்.
விழாவின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா், சுவாமி மற்றும் அம்பாள் தோ்களில் எழுந்தருள, மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.
விழாவில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், கோயில் நிா்வாக அதிகாரி முருகன், மாவட்ட அறங்காவலா் நியமன குழுத் தலைவா் சாமிநாதன், அறங்காவலா் குழுத் தலைவா் எம்.என். ஆா். ரவி, ஒன்றிய செயலாளா் பஞ்சு. குமாா் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


