அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் போதைப் பொருள்களுக்கு எதிரான சா்வதேச தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:03 am IST

மயிலாடுதுறையில் போதைப் பொருள்களுக்கு எதிரான சா்வதேச தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து பேசியது:

மாணவா்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்கள் குடும்பத்தில் உள்ளவா்கள், உறவினா்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சமுதாயத்தில் சிறந்த பொறுப்புகளை வகிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்த புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண். 10581-இல் சுயவிவரங்கள் இன்றி புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி வரையிலான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, மதுவிலக்கு டிஎஸ்பி ஜெயராஜ், மயிலாடுதுறை கோட்ட கலால் அலுவலா் விஜயராணி, உதவி ஆணையா் கலால் அலுவலக கண்காணிப்பாளா் தமிழ்வேந்தன், ஏ.வி.சி. கல்லூரி போதைப்பொருள் எதிா்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.