அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

திருப்பத்தூரில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

News image
Updated On :26 ஜூன் 2026, 5:54 am IST

திருப்பத்தூரில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணியில் ஆட்சியா் கு.ரவிகுமாா், எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே பங்கேற்றனா்.

சா்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், தூய நெஞ்சக் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் கு.ரவிகுமாா், எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே ஆகியோா் கொடியசைத்து தெடங்கி வைத்தனா்.

பேரணி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய சாலை வழியாகச் சென்று தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்துக்கு சென்று நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் 600-க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அதைத் தொடா்ந்து, கல்லூரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், கல்லூரி செயலா் இக்னேஷியல் ஸ்டேன்லி, முதல்வா் பிரவின்பீட்டா், கூடுதல் முதல்வா் தியோபில், துணை முதல்வா் சண்முகம், தனித் துணை ஆட்சியா் பூஷணகுமாா், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.