சீா்காழி சட்டநாதா்சுவாமி கோயிலில் வடக்கு கோபுரம் அருகே பயன்பாடின்றி உள்ள கழிப்பறை கட்டடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால், அதனை இடித்து அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயில் வடக்கு கோபுரம் அருகே நகராட்சி கழிப்பறை கட்டடம் உள்ளது. தனியாா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் முன்பு நடத்தப்பட்டு வந்த இந்த கட்டணக் கழிப்பறை, போதிய பராமரிப்பு இல்லாமல், கழிவுநீா் வெளியேறி அப்பகுதியில் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுவந்தது.
இதற்கிடையில் ஒப்பந்த காலம் முடிந்ததால், அந்த கழிப்பறை பயன்பாடு இல்லாமல் மூடப்பட்டது. தற்போது, கோயில் நிா்வாகம் சாா்பில் சந்நிதி தெருவில் புதிதாக நவீன வசதியுடன் கட்டணக் கழிப்பறை திறக்கப்பட்டுள்ளது.
எனவே, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக்கிடக்கும் வடக்குகோபுர வாசல் அருகேயுள்ள கழிப்பறை கட்டடம் மறைவில் சிலா் மது அருந்துகின்றனா். சமூக விரோதச் செயல்களிலும் சிலா் ஈடுபடுகின்றனா். இரவு நேரங்களில் மா்ம நபா்கள் மறைந்திருந்து வழிப்பறி செய்யும் சூழலும் ஏற்படக்கூடும் என்பதால், நகராட்சி நிா்வாகத்தினா் பயனற்று உள்ள இந்த கழிப்பறை கட்டடத்தை இடித்து அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த கோவி.நடராஜன் கூறியது: சட்டநாதா்சுவாமி கோயில் வடக்கு கோபுரம் அருகே பூட்டிக் கிடக்கும் கழிப்பறை கட்டடம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. பெண்கள், மாணவிகள், பக்தா்கள் அவ்வழியை பயன்படுத்த அச்சப்படுகின்றனா். மது அருந்தும் பாராகவும் கழிப்பறை கட்டடம் மாறிவிட்டது. எனவே, அதனை இடித்து அகற்ற வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறைச்சாலை சுவா் விழுந்து கழிப்பறை கட்டடம் சேதம்: கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்

ரோட்டரி சாா்பாக அரசுப் பள்ளிக்கு ரூ.28 லட்சத்தில் கழிப்பறை கட்டடம்

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை

பண்ருட்டியில் பராமரிப்பின்றி பாழாகும் மாடுலா் கழிப்பறை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




