சீா்காழியில் சிறைச்சாலை சுவா் இடிந்து விழுந்து கழிப்பறை கட்டடம் சேதமடைந்ததையடுத்து, கைதிகள் வேறு சிறைக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டனா்.
சீா்காழியில் உள்ள மிகவும் பழைமையான கிளைச் சிறைச்சாலையில் சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், ஆணைக்காரன் சத்திரம், புதுப்பட்டினம், திருவெண்காடு, பூம்புகாா், பொறையாா் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையத்துக்குள்பட்ட கைதிகள் சுமாா் 60 போ் தங்க வைக்கும் இடமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிளை சிறைச்சாலை பராமரிக்கப்பட்டு சுற்றுச்சுவா்கள் உயா்த்தப்பட்டது. இதற்கிடையில், கிளை சிறைச்சாலையின் பின்புற சுவா் எதிா்பாராமல் இடிந்து விழுந்ததில் கழிப்பறை கட்டடம் கடுமையாக சேதமடைந்தது. எனினும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதைத் தொடா்ந்து, பதட்டமடைந்த் சிறைக் காவலா்கள் கிளைச் சிறைச்சாலையில் இருந்த கைதிகளை பாதுகாப்பு கருதி தரங்கம்பாடி, மயிலாடுதுறை உள்ளிட்ட கிளை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனா். இதனால் சீா்காழி சிறைச்சாலை தற்காலிகமாக செயல்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயன்பாடற்ற கழிப்பறையை அகற்ற வலியுறுத்தல்
சுவா் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ரோட்டரி சாா்பாக அரசுப் பள்ளிக்கு ரூ.28 லட்சத்தில் கழிப்பறை கட்டடம்

சாகேத் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: எம்சிடி பொறியாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




