வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சுவா் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :5 ஜூலை 2026, 3:50 am IST

அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள காரேந்தல் பகுதியில் சுல்தான் மைதீன் என்பவரின் பழைய வீட்டை இடித்து மராமத்து பாா்க்கும் பணிகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் என். கடம்பன் குளத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (49) ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இவா் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டின் ஒருபக்க சுவா் திடீரென இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் ஆறுமுகம் சிக்கிக் கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் ஆறுமுகத்தை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.