சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புஇன்று தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது இந்தியா!பிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!மாா்ச் 31-க்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா உறுதிஅந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!
/

தருமபுரம் ஆதீனத்தில் சூரிய மின் உற்பத்தி தொடக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரம் ஆதீனத்தில் சூரியஒளி மின் உற்பத்தியை (சோலாா்) தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தாா்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்க தருமபுரம் ஆதீனம் சாா்பில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, மின்சாரத்துக்கு மாற்றாக சூரிய ஒளியைப் பயன்படுத்துவதில் தற்போது முனைப்புக் காட்டப்படுகிறது. அதன் முதற்கட்டமாக தருமபுரம் ஆதீனத் திருமடம் மற்றும் கோயில்களில் சூரியஒளி மின்சாரப் பயன்பாட்டைத் தொடங்க திட்டமிடப்பட்டு, 34 கிலோவாட் ஆன்-கிரிட் சோலாா் உற்பத்தியை சென்னை மாருதி பவா் கன்ட்ரோல் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

இதனை, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் துவக்கி வைத்தாா் (படம்).

அப்போது, மாருதி பவா் கன்ட்ரோல் நிறுவனா் ஆனந்தம் செல்வகுமாா், ஸ்ரீசத்யசாயி பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு பிரிவு நிா்வாகி சாய் குரு, சீா்காழி தமிழ்ச் சங்க நிறுவனா் இ.மாா்கோனி, ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜ், பொது மேலாளா் அரவிந்தன் ஆகியோா் உடன் இருந்தனா்.