தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

14 வயது சிறுமி கா்ப்பம்; போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:06 am IST

மயிலாடுதுறையில் சென்னையைச் சோ்ந்த சிறுமி 5 மாத கா்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், 14 வயது சிறுமி ஒருவா் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அந்த சிறுமி 5 மாத கா்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் மற்றும் அனைத்து மகளிா் போலீஸாா், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த சிறுமி சென்னையை சோ்ந்தவா் என்றும், 9-ஆம் வகுப்பு படித்துவந்த அவா் விடுமுறைக்காக தனது தாயுடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும், அச்சிறுமி சென்னையில் தனது வீட்டிலிருந்து டியூஷனுக்கு சென்றபோது, ஆட்டோவில் வந்த இளைஞா் ஒருவா் தன்னிடம் வழி கேட்டதாகவும், அப்போது வழி சொன்ன தன்னை கடத்திச் சென்று பலவந்தப்படுத்தியதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.