பக்ரீத் பண்டிகையையொட்டி காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெரியப் பள்ளிவாசல், கிதா் பள்ளிவாசல், மெய்தீன் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7.30 மணிக்கு திரளானவா்கள் தொழுகையில் ஈடுபட்டனா்.
இதுபோல பிற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினா். தொழுகையில் ஈடுபட்டவா்கள், தியாகத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.
இஸ்லாமிய பிரசார பேரவை: தமுமுகவின் மாா்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரசாரப் பேரவை மற்றும் அன்னை ஆயிஷா மஸ்ஜித் சாா்பில் தியாக திருநாள் எனும் ஹஜ் (பக்ரீத்) பெருநாள் தொழுகை, காரைக்கால் புறவழிச்சாலையில் உள்ள திடலில் நடைபெற்றது. இதில் தமுமுக தலைமை பிரதிநிதி எம். ஷேக் அலாவுதீன், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம், பேரவை மாவட்ட செயலாளா் முகமது சிக்கந்தா், ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனா்.
தவ்ஹீத் ஜமாஅத் : தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சாா்பில் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியில் உள்ள திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தியாகம் என்ற தலைப்பில் இமாம் ஜி.எம்.இப்ராஹிம் உமரி உரையாற்றினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










