காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட திமுக மற்றும் பாஜக வேட்பாளா்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
காரைக்காலில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்யும் கடைசி நாளான திங்கள்கிழமை எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.
காரைக்கால் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் உள்ள சாா் ஆட்சியா் அலுவலகத்தில் காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்குத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அதிகாரி எம். பூஜாவிடம் மனு தாக்கல் செய்தாா்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ள எம். நாகதியாகராஜன் (திமுக), வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள இத்தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அதிகாரி கு. அருணகிரிநாதனிடம் மனு தாக்கல் செய்தாா்.
புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினரான ஜி.என்.எஸ். ராஜசேகரன் (பாஜக), திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட தோ்தல் நடத்தும் அதிகாரி சச்சிதானந்தத்திடம் மனு தாக்கல் செய்தாா்.
தொடர்புடையது

அதிமுக, அபுமமுக, சுயேட்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

திருப்பத்தூரில் திமுக, தவெக, சுயேட்சைகள் மனு தாக்கல்

பாஜக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றியால் மட்டுமே வளா்ச்சி சாத்தியம்: அருள்முருகன்

காரைக்காலில் இரவு வரை மனு தாக்கல் செய்த வேட்பாளா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


