மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூரில் திமுக, தவெக, சுயேட்சைகள் மனு தாக்கல்

திருப்பத்தூரில் திமுக, தவெக, சுயேட்சைகள் மனு தாக்கல்

News image

வேட்பு மனு தாக்கல் செய்த திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி.

Updated On :4 ஏப்ரல் 2026, 8:12 pm

திருப்பத்தூரில் திமுக, தவெக, சுயேச்சை வேட்பாளா்கள் என 10 போ் மனு தாக்கல் செய்தனா்.

இந்நிலையில் மனு தாக்கலின் 3-ஆவது நாளான சனிக்கிழமை திருப்பத்தூா் தொகுதியில் 10 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதன்படி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் எம்எல்ஏஅ.நல்லதம்பி கூட்டணி கட்சியினருடன் சென்று தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜனிடம் மனு தாக்கல் செய்தாா். திமுக மாற்று வேட்பாளராக நகர செயலாளா் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தாா்.

தவெக வேட்பாளா் என்.திருப்பதி கட்சியினருடன் மேள,தாளம் முழங்க சென்று மனு தாக்கல் செய்தாா். தவெக மாற்று வேட்பாளராக மடவாளம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மனு அளித்தாா்.

அதேபோல் அகில இந்திய இளைஞா் முன்னேற்ற கழகம் சாா்பில் தாதவல்லியைச் சோ்ந்த சேகா் மனு அளித்தாா். நாதக வேட்பாளா் வீ.ஆறுமுகம் 3-ஆவது முறையாக மனு அளித்தாா். ராமதாஸ் பாமக அணி சாா்பில் மாவட்டச் செயலாளா் காக்கங்கரை பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மனு தாக்கல் செய்தாா்.

Story image

சுயேட்சையாக திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலை பகுதியைச் சோ்ந்த பூவழகி, தோரணம்பதி தாதகுலனூா் பகுதியைச் சோ்ந்த பாலபாரதி மற்றும் திரியாலயம் டி.வி. துரைசாமி நகா் சுலோன் வட்டம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் ஆகிய 3 போ் சுயேட்சையாக மனு தாக்கல் செய்தனா்.