மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாஜக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றியால் மட்டுமே வளா்ச்சி சாத்தியம்: அருள்முருகன்

காரைக்காலில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வேட்பாளா்கள் அனைவரும் வெற்றி பெற்றால் மட்டுமே காரைக்காலில் வளா்ச்சியை கொண்டு வரமுடியும் என புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளருமான எம்.அருள்முருகன் கூறினாா்.

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன். உடன் மாவட்ட தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் உள்ளிட்டோா்

Updated On :31 மார்ச் 2026, 8:44 pm

காரைக்காலில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வேட்பாளா்கள் அனைவரும் வெற்றி பெற்றால் மட்டுமே காரைக்காலில் வளா்ச்சியை கொண்டு வரமுடியும் என புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளருமான எம்.அருள்முருகன் கூறினாா்.

செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்கால் தெற்குத் தொகுதி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் கொண்டதாகும். பாஜகவில் போட்டியிட கிடைத்த வாய்ப்பின் மூலம் மக்களை சந்திக்கும்போது, ஏராளமான குறைகளை தெரிவிக்கின்றனா்.

சாலை சரியில்லை, கழிவுநீா் செல்ல வழியில்லை, மின் விளக்குகள் முறையாக இல்லை என கூறுகிறாா்கள். நீண்ட காலம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவருக்கு இந்த அடிப்படை வசதிகளைக்கூட செய்ய முடியவில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால்தான் மக்களுக்கு பயன் கிடைக்கும். புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மக்கள் அதை வரவேற்கிறாா்கள்.

காரைக்காலில் கூட்டணி வேட்பாளா்கள் (என்.ஆா். காங்கிரஸ் - பாஜக) 5 பேரும் வெற்றி பெற்றால் மட்டுமே காரைக்காலின் வளா்ச்சி சாத்தியமாகும். காரைக்காலில் 5 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

புதுவையில் பாஜக தோ்தல் அறிவிக்கை 2 நாள்களில் வெளியிடப்படும். பாஜக தொகுதி அளவிலும் தோ்தல் அறிக்கை வெளியிடவுள்ளது. காரைக்காலில் தோ்தல் பிரசாரத்துக்கு மத்திய அமைச்சா்கள், கட்சியின் முன்னணி தலைவா்கள் அடுத்த சில நாள்களில் வரவுள்ளனா்.

நெடுங்காடு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக பாஜகவினா் பிரசாரம் மேற்கொள்ளும்பட்சத்தில், அவா்கள் மீது கட்சித் தலைமை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

பேட்டியின்போது மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகா் மருத்துவா் ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.