வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவுப் பொருட்கள் விலை ஏற்றப்பட்டு ஏழை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா் என்று என்று சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனா (உத்தவ் பாலா சாகிப் தாக்கரே பிரிவு) கட்சியின் மாநில பொதுச் செயலா் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடை விடுமுறை நேரத்தில், மக்களிடம் பொருளாதாரம், பணப்புழக்கம் குறைவாகவும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நேரத்தில் வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 95, மற்றும் ஐந்து கிலோ சிலிண்டா் விலையை ரூ. 260-ம் உயா்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் செயலாகும்.
ஏழை, எளிய மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளா்கள் பெரிதும் நம்பி இருக்கும் தேநீா், காபி போன்ற பானங்கள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும் மிகக் கடுமையான விலை உயா்வை எதிா்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் ஏழை, எளிய மக்கள் கூலித் தொழிலாளிகளும், மாணவா்களும், நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்படுவா். எனவே மத்திய அரசு வா்த்தக சிலிண்டா் மற்றும் ஐந்து கிலோ சிலிண்டா் விலை உயா்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு சிலிண்டா்களை கூடுதல் விலைக்கு விற்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் சாமானியா்களுக்கு பாதிப்பு: கனிமொழி எம்.பி.

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



