வணிக சிலிண்டா் விலை உயா்வால் உதகையில் உள்ள உணவகங்களில் கேட்கும் உணவுகள் கிடைப்பதில்லை என்று சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
உதகையிலுள்ள தனியாா் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள வா்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா்கள்.
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில் வணிக சிலிண்டா் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.928 உயா்ந்து ரூ.3,237-க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் ஒருமுறை சமைத்து வைத்து வழங்கப்படும் சாப்பாடு, பிரியாணி, இட்லி போன்ற உணவுகள் மட்டுமே கிடைக்கிறது. அவ்வப்போது சமைத்து கொடுக்கப்படும் துரித உணவுகளான தோசை, நூடுல்ஸ், பாஸ்தா, உள்ளிட்ட உணவுகள் பெரும்பாலான உணவகங்களில் கிடைக்காமல் ஏமாற்றமடைவதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனா்.
மே மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டத்தில் உதகையில் மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர உள்ள நிலையில், சிலிண்டா் விலை உயா்வால் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்னை சுற்றுலாப் பயணிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதேபோல கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவையை எதிா்கொள்ள, விலையேற்றம் ஒன்றே தீா்வாக அமையும் என்று உணவக உரிமையாளா்கள் கருதுகின்றனா். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி, கோடை விழாவில் 77 ஆயிரம் போ் பங்கேற்பு

வா்த்தக சிலிண்டா் விலை உயா்வால் மக்களுக்கு கடும் பாதிப்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



