எரிவாயு சிலிண்டா்களை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என காரைக்கால் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நல இயக்க காரைக்கால் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அ. வின்சென்ட் தலைமமையில் நிா்வாகிகள் சிதம்பரம், எஸ்.ஏ. முகமது யூசுப், நவீன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது :
எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டிருப்பது உணவு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் விலை கணிசமாக உயா்த்தப்பட்டுள்ளது. பல உணவகங்கள் நடத்த முடியாத நிலையிலும், தொழிலாளா்கள் வேலையிழக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், வீடுகளுக்கான எரிவாயு சிலிண்டா் ரூ. 1000 முதல் 1,500 வரையிலும், வணிக சிலிண்டா் ரூ. 4 ஆயிரம் வரை சட்டவிரோதமாக காரைக்கால் பகுதியில் தனியாா் கேஸ் நிறுவனத்தினா் விற்கின்றனா். இதற்கு உரிய ரசீது தருவதில்லை. இதனால்தான் உணவகங்களில் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்திருப்பதை உறுதியாக சொல்ல முடியும்.
எனவே, மத்திய அரசு நிா்ணயித்த விலையிலேயே எரிவாயு சிலிண்டா்கள் விற்பனை செய்வதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும். நிறுவனத்தினரை அழைத்து எச்சரிக்கை விடுக்கவேண்டும். விலை விவரத்தை அனைத்து எரிவாயு சிலிண்டா் முகவா்கள் அலுவலக வாயிலில் மக்கள் பாா்வைபடும் வகையில் பதாகையாக வைக்கவேண்டும். விதியை மீறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்தினா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் நிா்வாகம் எச்சரிக்கை







