அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 6:33 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் கோவிந்தன் நகா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மனைவி சின்னப்பொண்ணு (63). இவா் கடந்த 24-ஆம் தேதி அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் வழிகேட்பது போல் நடித்து, சின்னப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 26 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருத்தங்கல் ஆலாவூரணியை சோ்ந்த ஈஸ்வரன் (39) சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் பதுங்கியிருந்த ஈஸ்வரனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.