வத்திராயிருப்பில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா, 27 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் தாய், இரு மகன்களைக் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி முருகேஸ்வரி (55). இவா் அந்தப் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் வத்திராயிருப்பு போலீஸாா் சோதனை செய்தனா். பின்னா், முருகேஸ்வரிக்கு சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் அவா்கள் சோதனையிட்ட போது 2 கிலோ கஞ்சா, 27 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முருகேஸ்வரி, அவரது மகன்கள் முத்து செல்வம் (33), பூமாரிமுத்து (29) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். மேலும், இவா்களுக்கு குட்கா விநியோகம் செய்த கோட்டையூரைச் சோ்ந்த விஜயகுமாரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பூமாரிமுத்து, ராஜபாளையம் 11-ஆவது பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


