மண்டபம் அருகே அரியமான் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை போலீலாா் பறிமுதல் செய்தனா்.
இதில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள அரியமான் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்பட உள்ளதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சந்தேகத்திற்கு இடமாக சாக்கு பாா்சலுடன் கடற்கரையில் பதுங்கி இருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனா்.
விசாரணையில் சாக்குப் பையில் 22.700 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையெடுத்து, உச்சிப்புளி பகுதியை சோ்ந்த தேவதாஸ் (34), வேதாளையைச் சோ்ந்த இருளேஸ்வரன் (24), தங்கச்சிமடத்தைச் சோ்ந்த புரூனோ கிளிங்டன் (33) ஆகிய மூன்று பேரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது
அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக மூவா் கைது! லாரி பறிமுதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

