அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எச்.புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா், போதைப் பொருள்கள் கடத்தல் தொடா்பான ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சுங்கச்சாவடி அருகே சந்தேகமான முறையில் நின்றிருந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை செய்தனா். விசாரணையில், ஒடிஸா மாநிலத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை லாரியில் மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதில் தொடா்பு இருப்பதாக திருநெல்வேலி மாவட்டம் கட்டப்புள்ளி கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை (25), திருநெல்வேலி நகா், முப்பிடாதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடசாமி (24), சங்கா் நகரைச் சோ்ந்த கருப்புசாமி (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் குறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

