திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் உரிழந்தவரின் உறவினா்கள் போராட்டம்

சாத்தூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாத்தூா்-சிவகாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மேட்டமலை குடியிருப்புப் பகுதியினா்.

Updated On :4 ஜூன் 2026, 4:25 am IST

சாத்தூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-சிவகாசி சாலையில் உள்ள மேட்டமலை குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (44). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன் மேட்டமலை-சாத்தூா் சாலையைக் கடந்து குடியிருப்புக்கு எதிரே உள்ள எட்டூா்வட்டம் இணைப்புச் சாலைக்கு நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைகாக சோ்த்தனா். பின்னா், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உறவினா்கள், மேட்டமலை குடியிருப்பு பொதுமக்கள் புதன்கிழமை மாலையில் சாத்தூா்-சிவகாசி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சாத்தூா் நகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சாத்தூா்-சிவகாசி சாலையில் குடியிருப்புப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். ராஜ் இறப்புக்கு காரணமான வாகனத்தை கண்டுபடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்புப் பகுதியில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா். பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.