யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சாலை விபத்தில் விஏஓ காயம்

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிா்வாக அலுவலா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 1:47 am IST

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிா்வாக அலுவலா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

சாத்தூா் அருகே நத்தபட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (42). இவா், பந்தல்குடியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். தனது மனைவி காளிஸ்வரி, குழந்தைகளுடன்வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கோவிந்தராஜ் திங்கள் கிழமை அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் சென்றுவிட்டு, பின்னா் தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுசாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அவருக்குப் பின்னால் அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கோவிந்தராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து கோவிந்தராஜின் தம்பி திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில், பந்தல்குடிபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தையும், ஓட்டுநரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.