மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை: இரா. முத்தரசன்

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

News image

இரா. முத்தரசன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:58 pm

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இது தொகுதியில் யாா் போட்டியிடுகிறாா் எனப் பாா்த்து வாக்களிக்கும் தோ்தல் அல்ல.

மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரம், பாசிசம் வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் இப்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் தோ்தலிலிருந்து எந்தக் கூட்டணியும் ஓராண்டுக்கு மேல் நீடித்தது இல்லை. ஆனால், திமுக கூட்டணி 10 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கொள்கைக் கூட்டணி.

இந்தக் கூட்டணி விருதுநகா் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும், தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களிலும் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நன்கு படித்த சாதாரண தொண்டா் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.

திமுக தனது தோ்தல் அறிக்கையில் குறிப்பிட பெரும்பாலான வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியது. இதேபோல, 2026 பேரவைத் தோ்தலையொட்டி, திமுக வெளியிட்ட தோ்தல் வாக்குறுதிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றாா் அவா்.