தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆனைக்குளத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கக் கோரிக்கை

நரிக்குடி ஒன்றியத்தை சேர்ந்த ஆனைக்குளத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :2 பிப்ரவரி 2015, 6:59 pm

நரிக்குடி ஒன்றியத்தை சேர்ந்த ஆனைக்குளத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி வியாபாரிகள் சங்க தலைவர் ராமர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனு: நரிக்குடி ஒன்றியத்தில் ஆனைக்குளம், பூமாலைபட்டி, புதூர், நத்தக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி மக்கள் ஏதேனும் தகராறு அல்லது விபத்து என்றால் புகார் செய்ய வீரசோழன் காவல் நிலையம் செல்ல வேண்டும். அதற்கு திருச்சுழி, நரிக்குடி வழியாக 30 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும். இல்லையெனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டலமாணிக்கம் சென்று அங்கிருந்து வீரசோழன் செல்ல வேண்டும். இதனால் சிறிய பிரச்னைகள், போலீஸார் வருவதற்குள் பெரிதாகி விடுகிறது.

எனவே, ஆனைக்குளத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.