தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பழுதடைந்த சாலையால் பஸ் நிறுத்தம்: மக்கள் அவதி

நரிக்குடி பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

Updated On :28 செப்டம்பர் 2013, 7:29 pm

நரிக்குடி பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

   நரிக்குடி அருகே உளுத்திமடையிலிருந்து, 6 கி.மீ. தொலைவில் உள்ள செங்கமடை, உளுத்திமடை, பட்டனேந்தல், வாகைக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் நரிக்குடி ஒன்றியத்தில் இருந்தாலும், இப்பகுதி மக்கள் தங்களின் தேவைக்கு, அருகிலுள்ள திருப்புவனம் மற்றும் மதுரைக்கு செல்வர். கல்லூரி மாணவர்களும், திருப்புவனம், மதுரைக்கு செல்கின்றனர். இவர்களின் தேவைக்காக, மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து உளுத்திமடை வரை வந்து செல்ல, அரசு பஸ் உள்ளது. உளுத்திமடையிலிருந்து உச்சனேந்தல் வரையிலான, 6 கி.மீ. தூரமுள்ள சாலை முழுவதுமே மோசமாக இருப்பதால், இந்த பஸ், பழையனூர் வரை மட்டுமே வந்து செல்கிறது. இதனால், தினமும் கூலி உள்ளிட்ட வேலைக்கு செல்லும், நூறுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாணவர்கள், 5 கி.மீ. தூரம் பழையனூர் நடந்து சென்று, பஸ் ஏறிச் செல்கின்றனர். பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து உளுத்திமடை வரை பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.