தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருச்சுழியில் அதிமுக பொதுக்கூட்டம்

திருச்சுழி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழ்ப்பாடியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொகுதிச் செயலாளர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் இந்திரா மோகன், ஒன்றிய

Updated On :22 செப்டம்பர் 2013, 7:36 pm

திருச்சுழி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழ்ப்பாடியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொகுதிச் செயலாளர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் இந்திரா மோகன், ஒன்றிய கவுன்சிலர் சொக்கர் என்ற ரகுக்குமார், மாவட்ட கவுன்சிலர் மகாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி இணைச் செயலாளர் பழனி வரவேற்றுப் பேசினார். தலைமைக் கழக பேச்சாளர் கோபி சிறப்புரையாற்றினார். கைத்தறித் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் பேசும் போது, தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில அனைத்து உதவிகளையும் முதல்-அமைச்சர் செய்து தருகிறார். கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதல் - அமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றிக்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.   மாவட்ட பொருளாளர் குருசாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர் முனியாண்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் ராமலிங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

     கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.