தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செயலாளர், பணியாளர்கள் இல்லாத கூட்டுறவு வங்கி: விவசாயிகள் தவிப்பு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள வலுக்கலொட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளர் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் விவசாயிகள் நகை கடன் மற்றும்

Updated On :17 அக்டோபர் 2013, 7:10 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள வலுக்கலொட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளர் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் விவசாயிகள் நகை கடன் மற்றும் விவசாயத்திற்கு தேவையான உரங்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

  வலுக்கலொட்டி கூட்டுறவு வங்கியின் கீழ் வலுக்கலொட்டி, நாகம்பட்டியில் ரேஷன் கடைகள் உள்ளன. இந்த வங்கியில் பணியாற்றிய செயலாளர் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். இதுவரை செயலாளர் நியமனம் செய்யப்படவில்லை. இரண்டு ரேஷன் கடைகளிலும் ஒரு விற்பனையாளர் பணியாற்றி வந்தார்.

  இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேஷன் பொருட்களை கடத்தியதாக விற்பனையாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். புதிய விற்பனையாளர் நியமனம் செய்யப்படாததால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை.

  விவசாயிகள், கிராம பொதுமக்கள் அவசர தேவைக்கு வங்கியின் நகைக்கடன் பெற முடியவில்லை.

   வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்பவும் முடியாமல் தவிக்கின்றனர். இதுபற்றி வங்கி இயக்குநர் ரவீந்திரன் கூறியதாவது: வங்கியில் செயலாளர், எழுத்தர், விற்பனையாளர், காவலர், கணிணி இயக்குநர் என அனைத்து பணியிடங்களும் காலியாக உள்ளன. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாற்காலிகமாக ஒரு விற்பனையாளரை நியமிக்க வங்கி நிர்வாகக்குழுவில் தீர்மானம் போட்டு அதிகாரிகளுக்கு அனுப்பியும் அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவில்லை.

  வங்கியில் பணியாளர்கள் இல்லாததால் தற்போது நகைகளையும், ரேஷன் பொருட்களையும் வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றார். வங்கியில் பரிதாப நிலை குறித்து கூட்டுறவு துறை உயர்அதிகாரிகளிடம் கேட்டபோது பதில் கூற மறுத்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.