தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கிராமங்களில் குழந்தைகள் தின விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஒன்றியங்களில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மதுரை பல்நோக்கு சங்கம் சைல்டுலைன், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஒன்றியம் சைல்டுலைன் துணை மையம் சார்பாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On :16 நவம்பர் 2013, 7:00 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஒன்றியங்களில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மதுரை பல்நோக்கு சங்கம் சைல்டுலைன், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஒன்றியம் சைல்டுலைன் துணை மையம் சார்பாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    குழந்தைகளுக்கான தேவைகள், பிரச்னைகள் குறித்த கருத்தரங்கங்கள், சமூகம் சார்ந்த குழுக்களுக்கான கூட்டங்கள், காவல்துறை, அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வுகள், சைல்டுலைன் தன்னார்வ நபர்கள் உருவாக்கம், குழந்தைகளுக்கு தனித்திறனை வளப்பதற்காக ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பொதுமக்களுக்கு சைல்டுலைன் ராக்கி கயிறுகளை கட்டியதுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும், பராமரிப்பையும் உறுதி செய்வதற்கு 24 மணி நேர இலவச அவசர தொலைபேசி எண் 1098 தொடர்பு கொண்டு பேசலாம் என கூறினார்.

  குழந்தைகள் தின விழாவுக்கான ஏற்பாடுகளை சைல்டுலைன் உறுப்பினர்கள் பொருட்செல்வி, அழகர்சாமி, ஞானம், சோபியா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.