டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் சௌடாம்பிகை மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழா

இப்பள்ளியின் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்விக்குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அல்லம்பட்டி மஹாஜன சபைத்தலைவர் ரெங்கராஜன், செயலர் மணிசங்கரன் ஆகியோர் முன்னிலை

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:52 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் சௌடாம்பிகை மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இப்பள்ளியின் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்விக்குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அல்லம்பட்டி மஹாஜன சபைத்தலைவர் ரெங்கராஜன், செயலர் மணிசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் கணேசன்(பொறுப்பு) வரவேற்புரை வழங்கினார். இதில், நகராட்சி தலைவர் மா.சாந்தி பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இதில், 90 பேருக்கு வழங்கப்பட்டது.மேலும், இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன்,  உறுப்பினர்கள் முகமது நயினார், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இறுதியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் நன்றியுரை கூறினார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.