பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பஜௌர், பன்னு ஆகிய பகுதிகளில் அண்மைக் காலத்தில் ஆப்கானிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் அமைந்ததாக பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‘புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட ஆப்கன் பிராந்தியத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட உயிர்ப்பலி ஏற்படுத்தியுள்ள பாகிஸ்தானின் வான் வழி தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது’ என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு கண்டனம் தெரிவித்து சம்மன் அனுப்பியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி இருக்கும் என்றும் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
Summary
In response to media queries about Pakistan’s airstrikes on Afghanistan, Official Spokesperson Shri Randhir Jaiswal said: India strongly condemns Pakistan’s airstrikes on Afghan territory that have resulted in civilian casualties, including women and children, during the holy month of Ramadan."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தும் இந்தியா!

தாக்குதல்கள் தீர்வாகாது!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

படுகொலையை மாற்ற முயற்சி! - ஆப்கன் மருத்துவமனை மீதான பாக். தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


