விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியக்குழு கூட்ட அரங்கத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்ட அரங்கத்துக்கு முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் பெயர் இருந்து வந்தது. அந்த பெயரை நீக்கி எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டுமென சென்ற மாதம் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், கவிதா, அழகு, பழனிச்சாமி, கார்த்திகா, ஈஸ்வரி ஆகியோர் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றலாம் எனக்கூறிய ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி தீர்மானத்தை ஒத்தி வைத்தார். இந்த நிலையில் கடந்த வாரம் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் காளிமுத்து தங்கபாண்டியன் பெயரை நீக்க தடை விதிக்க வேண்டுமென அருப்புக்கோட்டை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், உள்பட 6 பேர் எதிர்தரப்பான தங்களையும் விசாரிக்க வேண்டுமென கோர்ட்டில் முறையிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பெயர் மாற்றம் குறித்து முடிவெடுக்க ஒன்றியக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. காளிமுத்துவும் ஒன்றியக்குழு உறுப்பினராக இருப்பதால் அவரது விவாதத்தையும் பதிவு செய்யலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து ஒன்றியக்குழுவின் அவசரகூட்டம் தலைவர் முத்துலெட்சுமி தலைமையில் துணை தலைவர் ராமமூர்த்தி ஆணையாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன் உள்பட 6 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 3 திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அனைத்து உறுப்பினர்கள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேறியது.
கூட்டத்தில் துணை தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்து காரியாபட்டி ஒன்றியத்தை உள்ளடக்கிய அருப்புக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று முதன் முறையாக முதல்வராக பதவி ஏற்றார்.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்ற எம்.ஜி.ஆர். நினைவை போற்றும் வகையில் காரியாபட்டி ஒன்றியக்குழு கூட்ட அரங்கத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

