அனைத்து குடும்ப அட்டைக்கும் பருப்பு பாமாயில் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
காரியாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராம ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பொருள்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










