தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், விருதுநகர் கிழக்கு  மாவட்டக் கூட்டம் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

Updated On :4 ஜனவரி 2013, 9:07 pm

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், விருதுநகர் கிழக்கு  மாவட்டக் கூட்டம் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

 மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை வரவேற்றார். மாவட்டத் தலைவர்  சுந்தரமூர்த்தி புதிய பென்சன் திட்டத்தால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பேசினார். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கல்யாணி சிறப்புரையாற்றினர்.

 மாவட்டச் செயலர் திருவண்ணாமலை சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.

 அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவதைத்   தவிர்க்க வேண்டும். கம்யூட்டேஷன் தொகை பிடித்தம் செய்வதை, 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு  பழைய முறையிலேயே பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

 உறுப்பினர் செல்லையா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.