தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நரிக்குடி பகுதியில் மினி பஸ் இயக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் மினி பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :18 டிசம்பர் 2013, 6:44 pm

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் மினி பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுபற்றி பொதுமக்கள் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்க தலைவர் விசுவாசம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

  நரிக்குடி ஒன்றியத்தில் 176 கிராமங்கள் உள்ளன. நரிக்குடியிலிருந்து, இவை 25 கி.மீ. தூர சுற்றளவில் அமைந்துள்ளன. இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் காவல்நிலையம், ஒன்றிய அலுவலகம், மருத்துவமனை, மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச்செல்ல நரிக்குடி தான் வரவேண்டும். மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமேசுவரம், ராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி போன்ற நகரங்களுக்கு செல்லவும் இங்குதான் வரவேண்டும். ஆனால், இக்கிராம பகுதிகளில் போதிய அளவு போக்குவரத்து வசதி இல்லாததால், பொதுமக்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சில சமயங்களில் 10 கி.மீ. வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதனால், சரக்கு வாகனங்களில், ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, நரிக்குடி - முத்தனேரி - வீரசோழன், நரிக்குடி - மறையூர் - இருஞ்சிறை - கட்டனூர், நரிக்குடி - சாலை இலுப்பைகுளம் - பனைக்குடி, நரிக்குடி - இருஞ்சிறை - கட்டனூர், நரிக்குடி - தர்மம் - கொட்டக்காச்சியேந்தல், நரிக்குடி - முத்தனேரி - அகத்தாகுளம், விடத்தகுளம் வழித்தடங்களில் மினி பஸ் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.