தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காரியாபட்டி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த கோரிக்கை

இடநெருக்கடியில் உள்ள காரியாபட்டி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Updated On :14 டிசம்பர் 2013, 6:41 pm

இடநெருக்கடியில் உள்ள காரியாபட்டி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

  இதுபற்றி பொதுமக்கள் சார்பில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் காரியாபட்டி ஒன்றிய துணைச் செயலர் சின்னராஜா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காரியாபட்டி பஸ் நிலையம் மதுரை - தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, அருப்புக்கோட்டை, திருச்சி, திருச்செந்தூர், தூத்துக்குடி, விருதுநகர், திருமங்கலம் போன்ற ஊர்களுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. அத்துடன் காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் நகரப் பேருந்துகளும் விடப்பட்டுள்ளன.

   ஆனால் இந்த பஸ் நிலையம் இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பஸ்கள் உள்ளே வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. பஸ் நிலையத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ்கள் முறையாக உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் பஸ் கால அட்டவணை, குடிநீர் வசதி, இலவச கழிப்பறை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். வளர்ந்து வரும் காரியாபட்டி நகருக்கு மிகவும் முக்கியமானதாக உள்ள பஸ் நிலையத்தினை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

   மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.