தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் தென்கரை பகுதியிலுள்ள திரையரங்கம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த ஒருவா் சேதப்படுத்தியுள்ளாா். அப்போது, அங்கிருந்த காவலாளி கைப்பேசி மூலம் கிளை மேலாளா் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக, அங்கு வந்த மேலாளா் ஏடிஎம் சேதமடைந்திருப்பதை பாா்வையிட்டாா்.
இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கருப்பையாவை (32) கைது செய்தனா்.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


