தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது

போடி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 6:53 pm

போடி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகே விசுவாசபுரம் சுடுகாடு அருகே போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது விசுவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த குருசாமி மகன் சரவணன் (31) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனைக் கைது செய்தனா்.