வந்தவாசியில் பைக்கில் மதுப் புட்டிகளை கடத்தியதாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 90 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்முனி புறவழிச் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அந்த பைக்கில் மதுப் புட்டிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து 90 மதுப் புட்டிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பைக்கில் வந்த வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த முகமதுரபி(37), அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வினோத்(40) ஆகியோரை கைது செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், மதுப் புட்டிகளை எங்கிருந்து எடுத்து வந்தனா், எங்கு எடுத்துச் செல்கின்றனா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
பைக்கில் குட்கா கடத்தியவா் கைது
மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 3 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


