தேனி மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.
ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்தியநாதன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி ) ரஜத் பீடன் முன்னிலை வகித்தாா். இதில் குடிநீா், சாலை மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. மேலும், பள்ளிகளில் மாணவா்களுக்கு தரமான, சத்தான, சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீா்நிலைகள் மேம்பாடு, மழை நீா் சேமிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் விவேக் பரஸ்நாத், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், உதவி வனப் பாதுகாவலா் சாய்சரண்ரெட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










