மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சின்னமனூரில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

News image

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:58 pm

உத்தமபாளையம், ஏப். 21: தேனி மாவட்டம், சின்னமனூரில் பூலாநந்திஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் 18 நாள் சித்திரைப் பெருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

சின்னமனூரில் பாண்டியா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள கொடிமரத்தில் காலை 8.25 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, காலை , மாலையில் சுவாமி, அம்மன் ஏக சப்பர வாகனம், மயில் வாகனம், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 8- ஆவது நாளில் சுவாமி - அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 9 -ஆம் நாள் காலை 9 மணிக்கு சுவாமி - அம்மன் திருத்தேரில் எழுந்தருளிய பிறகு, மாலை 5 மணி முதல் நாள் தேரோட்டம் நடைபெறும்.

10 -ஆம் நாளில் 2 ஆம் நாள் தேரோட்டம் நடைபெறும். 18 ஆம் நாளான மே -8 -ஆம் தேதி சிறப்பு பூஜையுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறும்.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் நித்யா, 17 மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.